பெண்ணின் நெஞ்சில் பாய்ந்த கத்தி - கத்தியுடன் 30 மணி நேரம் அறுவை சிகிச்சை
கோவை அரசு மருத்துவமனையில் நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் 30 மணி நேரம் அறுவை சிகிச்சை போராட்டத்திற்கு பிறகு பெண்ணின் உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
ஓசூரை சேர்ந்த மல்லிகா என்பவரை, கடந்த மே 25ஆம் தேதி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் மே 26ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், மேல் சிகிச்சைக்காக நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைத்துறையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அவசர இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இதய அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன் தலைமையிலான குழு, சுமார் 30 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின், நெஞ்சு பகுதியில் 6 அங்குலம் இறங்கியிருந்த கத்தியை அகற்றினர். இந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
Next Story

