மினி டாஸ்மாக் குடோனாக மாறிய காவல் நிலையம் - 3,500க்கும் மேலான மது பாட்டில்களை காட்சிப் படுத்திய போலீசார்
தனிக் கடை திறக்கும் அளவுக்கு, ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பாதுகாத்து வைத்துள்ளனர்.
கொரோனா தொற்று அதிகம் பரவும் சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதியில் ஓரிரு இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்நிலையில், பூந்தமல்லி அடுத்த திருமழிசை கூட்டுச் சாலையில், சோதனையில் ஈடுபட்ட போலீசார், பல்வேறு வகை மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றை அடுக்கி வைத்துள்ளதை பார்த்தால், போலீசார் மதுக்கடை திறந்துள்ளதை போல தோன்றும் அளவுக்கு வகைவகையான மதுபாட்டில்கள் உள்ளன. இதுவரை பிடிபட்ட மூவாயிரத்து 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் காட்சிப்படுத்தினர். அவை அனைத்தும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

