நாட்டியாஞ்சலிக்கு ரூ.2 ஆயிரம் வழங்குங்கள்" - நாட்டியாஞ்சலி பள்ளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தீட்சிதர்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 19ஆம் தேதி, ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 19ஆம் தேதி, ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தீட்சிதர் ஒருவர் நாட்டியாஞ்சலி பள்ளிகளில் பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐயப்பன் என்ற அந்த தீட்சிதர் இந்த குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளார். அதில், நாட்டியாஞ்சலி பள்ளிகள் 2 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக கோயிலுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள பொது தீட்சிதர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 10 ஆயிரம் பேரை கொண்டு நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி, பல லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பதாக ஐயப்பன் மீது, கோயில் தீட்சிதர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Next Story

