மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடற்பகுதி மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலைகள் ஒரு சில நேரங்களில் 3 மீட்டர் முதல் 3.4 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்