வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு வைரசின் வீரியம் அதிகம் - இருமுறை கொரோனா சோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டம்

வெளிமாநிலத்தில் இருந்து கொரோனோ தொற்றுடன் வரும் நோயாளிகள் பலருக்கு வைரசின் வீரியம் அதிகம் இருப்பதால், மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர், இருமுறை கொரோனா சோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு வைரசின் வீரியம் அதிகம் - இருமுறை கொரோனா சோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டம்
x
மராட்டியம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து வருகிறவர்களில் கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு, அந்த வைரசின் வீரியம் அதிகமாக இருப்பதாக பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்புடன், அறிகுறி இல்லாமல் வருகிறவர்கள் அனைவரையும், மருத்துவமனையில் அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அங்கு சிகிச்சை அளித்த பின்னர், அவர்களுக்கு பழைய நடைமுறைப்படி, 2 முறை பரிசோதனை செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. அப்போது, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, டிஸ்சார்ஜ் செய்ய  சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்