சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்
x
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் ருத்ரதாண்டவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

சென்னையில் கொரோனா தீவிரம் அடைந்ததை அடுத்து, இந்த சிறப்பு கண்காணிப்புக் குழுவை மாற்றி அமைத்து மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழு மண்டலம் வாரியாக கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த சிறப்புக்குழுவை கண்காணிக்க நேற்று முன் தினம் மண்டல வாரியாக அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் சிறப்பு திட்டங்கள் வகுத்து அதனை செயல்படுத்த சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் பங்கஜ் குமார் பன்சால் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த இந்த மண்டலங்களில் நுண்ணிய அளவிலான சிறப்பு திட்டங்கள் வகுத்து அதனை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது. பவன் குமார் பன்சால் மண்டலம் வாரியாக உள்ள அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து சிறப்பு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி, மண்டலங்களின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தினமும் தலைமைச் செயலாளருக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்