இணையத்தில் சினிமா வெளியாவது நல்லதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்தால் பரபரப்பு

வரவேற்கும் திரையரங்க உரிமையாளர்கள் ஆதங்கப்படும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவது நல்லதில்லை என தமிழக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இணையத்தில் சினிமா வெளியாவது நல்லதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்தால் பரபரப்பு
x
வரவேற்கும் திரையரங்க உரிமையாளர்கள் ஆதங்கப்படும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவது நல்லதில்லை என தமிழக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றிய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

பொதுவாக சினிமாவையே செல்லமாக வெள்ளித்திரை என்று அழைப்பது வழக்கம். ஆனால் அந்த சினிமா வெள்ளித்திரையையே பார்க்காமல் நேரடியாக இணையத்தில் வெளியாகும் ஏற்பாடுதான்,  ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற OTT தளங்கள். 

நம் தமிழ் சினிமாவின் காதைப் பிடித்து இந்த OTT தளங்கள் நோக்கி தரதரவென இழுத்து வந்திருப்பது கொரோனா காலகட்டம்தான். டீக்கடைகளிலேயே உட்கார்ந்து பேசக் கூடாது எனும் போது தியேட்டர்கள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. படத்தை முடித்து வைத்து தயாரிப்பு செலவுக்காக வட்டி கட்டிக் கொண்டிருக்கும் சினிமாத்துறைக்கு இதற்கு மேல் காத்திருக்க பொறுமை இல்லை. OTT வழியாக வெளியாகியும் வெற்றி பெறலாம் லாபம் சம்பாதிக்கலாம் என முதல் அடியை எடுத்து வைத்து உணர்த்தியிருக்கிறது ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம்.

இந்தப் படம் கையைக் கடிக்கவில்லை என்றதும் ருசி கண்ட பூனையாகிவிட்டது தமிழ் சினிமா. தொடர்ந்து, திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், யோகி பாபுவின் காக்டெயில், சந்தானத்தின் சர்வர் சுந்தரம், அமலா பால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, இந்த நிலை மாறும், பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட 12 திரைப்படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாக வரிசை கட்டி நிற்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்