மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தால் தேர்வு எழுத தடை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நிலையான இயக்க விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது
மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தால் தேர்வு எழுத தடை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
x
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நிலையான இயக்க விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார். அதில், 99 பாரன்ஹீட்  வரை உடல் வெப்பம் உள்ள மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கலாம் என்றும்,அதைவிட அதிகமாக வெப்ப அளவு இருந்தால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு பயத்தின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகம் இருக்கும் மாணவர்களை இருமுறை சோதனை செய்ய வேண்டும் .இரண்டாவது முறை சோதனையின் போத அவர்களுடைய உடல் வெப்பநிலை அதிகம் இருந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.காய்ச்சல் அறிகுறிகளுடன் மாணவர்கள் தேர்வுக்கு வந்து கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவர்கள் சிறப்பு தேர்வின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அறிவுறுத்தப்படுகிறார்கள்.தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் தேர்மல் ஸ்கிரீன் கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள். உடல் வெப்ப நிலை அதிகம் இருந்தும், எந்தவிதமான கொரோனா அறிகுறிகளும் இல்லாமல் இருந்தால் அவர்கள் தனி அறையில் வைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்