"இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி" - மத்திய அரசு மீது கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதியை வழங்கி வருவதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி - மத்திய அரசு மீது கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
x
மத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதியை வழங்கி வருவதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித நிதியையும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.  ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொரோனா பாதிப்பு  தொடர்பாக தமிழக அரசு சொல்லும் எதையும் ஏற்று கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். தற்போதைய இக்கட்டான சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேவையில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்