கொரோனாவுக்கு இலவச சித்த மருத்துவ சிகிச்சை - மாநகராட்சி உதவியுடன் தனியார் கல்லூரியில் பிரத்யேக மையம்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாநகராட்சி உதவியுடன் பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு இலவச சித்த மருத்துவ சிகிச்சை - மாநகராட்சி உதவியுடன் தனியார் கல்லூரியில் பிரத்யேக மையம்
x
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாநகராட்சி உதவியுடன் பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய சூழலில் 18 ஆயிரத்து 693 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதனால் வைரஸை கட்டுப்படுத்த மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில்  சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில்  மாநகராட்சி உதவியுடன் 200 படுக்கை வசதி கொண்ட பிரத்யேக சித்த மருத்துவ சிறப்பு  மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக 22 நபர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.காலையில் எழுந்தவுடன்   7 மணி முதல் 8 மணி வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சூரிய ஒளி வெளிச்சம் உடலில் படும்படி வெயிலில் நிறுத்த வைக்கப்படுகின்றனர். மாலையில்,  4-30 மணி முதல் 5-30 மணி வரை, மீண்டும் சூரிய ஒளியில் வெளிச்சம் படும்படி நிறுத்தப்படுகின்றனர். மூச்சு பயிற்சி, யோகா, மூலிகை ஆவி பிடிக்கும் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. சீரான இடைவெளியில் கபசுரக் குடிநீர், ஆடாதொடை கசாயம், சித்த மருத்துவம் கலந்த சிறப்பு மூலிகை தேநீர் வழங்கப்படுகிறது  மதியம் வழக்கமாக வழங்கப்படும் உணவுகளை தாண்டி, நுரையீரல் ஆரோக்கியம் சார்ந்த உணவுகளான தூதுவளை சூப், கற்பூரவள்ளி ரசம், வேப்ப ரசம், கொள்ளு ரசம் ஆகியவையும் வழங்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்