பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம் ரூ.2.70 லட்சம் மோசடி

பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம், 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம் ரூ.2.70 லட்சம்  மோசடி
x
பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம், 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை சேர்ந்த சீனிவாசன் எனபவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், ஃபேஸ்புக் மூலம் ஜெயக்குமார் ராமசாமி என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். பழைய நண்பர் என கூறி பேசி, அவருடைய உறவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் அவரது மகள் கஷ்டப்படுவதாக கூறி, 3ஆயிரத்து 500 ரூபாய் பணம் போடும்படி கூறியுள்ளார். அதனை நம்பி சீனிவாசன் பணம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து ஒரு மாதத்தில் அடுத்தடுத்து பல காரணங்களை கூறி  2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்