"2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு" - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்
x
மின் கணக்கீட்டு முறையில், நுகர்வோர், 20 முதல் 30 விழுக்காடு வரை கூடுதலாக கட்டணம் செலுத்த நிலை உருவாகி இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனை மறுத்துள்ள மின்சார வாரியம், வழக்கமான நடைமுறையின்படி, 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. மின் கட்டணத்தில் நுகர்வோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகி தெளிவு பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்கு மாத மின் நுகர்வு இரண்டு மாதங்களாக பிரிக்கப்பட்டு அதன்படி மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுவதாகவும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்