கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி சீர்வரிசை வழங்கினார்.
x
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அங்கேயே, திமுக தொண்டர் ஒருவரின் இல்ல திருமணம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாங்கல்யம் எடுத்துக்கொடுத்து, மணமக்களை வாழ்த்தினர். பின்னர், புதிதாக திருமணமான மணமக்களுக்கு, ஸ்டாலின் சீர்வரிசை கொடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்