திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளாரா? - ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக கைது செய்யப்பட்ட திருத்தணிகாசலம் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதை எதிர்த்து, அவரது தந்தை கலியபெருமாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கபசுர குடிநீர் குடிக்க அறிவுரை வழங்கியதற்காக குண்டர் சட்டத்தில் திருத்தணிகாசலம் அடைக்கப்பட்டுள்ளாரா என ஒரு வாரத்தில் தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Next Story