அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - சென்னையை சேர்ந்த இருவர் கைது

அரசு தேர்வு துறை இயக்குனர் போல் நடித்து வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - சென்னையை சேர்ந்த இருவர் கைது
x
ராமநாதபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான டெய்சி, தனது மருமகன் மற்றும் உறவினர்களின் அரசு வேலை தொடர்பாக சென்னையில் குடும்ப நலத்துறையில் உதவியாளராக பணி புரிந்து வரும் ஜார்ஜ் பிலிப் என்பவரை அணுகியுள்ளார். 3 பேருக்கும் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்ய 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற பிலிப், கல்வி சான்றிதழ்களை வாங்கியுள்ளார். பின்னர், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பிரகாஷ் என்பவரிடம் டெய்சி 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், பணம் வாங்கிக் கொண்டு, எந்த பதிலும் கூறாமல், காரில் சென்றதால் சந்தேகம் அடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் ஜார்ஜ் பிலிப் சென்ற காரை எஸ்.பி.பட்டினம் அருகே போலீசார் துரத்திப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரகாஷ் என்பவர் அரசு தேர்வாணைய செயலாளராக பணியாற்றி வருவதாக கூறி, தமிழகம் முழுவதும் பல பேரிடம் லட்சக் கணக்கில் ஏமாற்றி வசூல் செய்தது தெரிய வந்துள்ளது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்