மே மாத சம்பளம் - போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

மே மாத சம்பளத்தை முழுமையாக வழங்க கோரி பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
மே மாத சம்பளம் - போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
x
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கடந்த 11 மாத வருகைப் பதிவேடு கணக்கீட்டின் தகுதி அடிப்படையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அவர்கள், முழு சம்பளம் வழங்காத வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று கூறினர்.

இதேபோல் சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைக்கக்கூடாது என்று வலியுறுத்திய அவர்கள், சென்னையில் சுழற்சி முறையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பழனி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரசுப் பேருந்துகளில் ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், மே மாத சம்பளத்தை பிடித்தம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

கோவையில் சுங்கம் பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தொழிலாளர்களின் சொந்த விடுப்பில் கை வைக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர்கள், மே மாத சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்