"எப்படி எல்லா கைதிகளும் கழிவறையில் வழுக்கி விழுகின்றனர்?" - காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

காவலரை திட்டியதாக கைது செய்யப்பட்ட தேவேந்திரன் என்பவர் கழிவறையில் வழுக்கி விழுந்த‌து குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
x
சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவேந்திரன். இவர்  கடந்த 4 நாட்கள் முன்பு அம்பத்தூர் காவல் நிலையம்  அருகே நின்று கொண்டிருந்த போது மதுவிலக்கு காவலர் நாதமுனி தேவந்திரனின் இருசக்கர  வாகனத்தை சோதனை செய்துள்ளார்.  இதில் ஆத்திரம் அடைந்த தேவந்திரன், காவலர் நாதமுனி திட்டியதால் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தேவேந்திரன் கழிவறையில் வழுக்கி விழுந்து , வலது கை உடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தலையிட்ட மனித உரிமை ஆணையம், எப்படி எல்லா கைதிகளுக்கும் கழிவறையில் வழுக்கி விழுந்து கை உடைகிறது என கேள்வி எழுப்பியுள்ளது. வழுக்கி விழும் அளவிற்கு கழிவறை அசுத்தமாக இருக்கும் பட்சத்தில், காவலர்களுக்கு எப்படி எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமைகள் ஆணையம், தேவேந்திரன் கை உடைந்த விவகாரத்தில் உரிய வளக்கம் அளிக்குமாறு அம்பத்தூர் மதுவிலக்கு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்