டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி : ஸ்டாலின் விமர்சனம் - அமைச்சர் கண்டனம்
பதிவு : மே 29, 2020, 06:53 PM
டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது கருத்துக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 4 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை மூலமாக பல்வேறு திட்டங்களில், ஆயிரக்கணக்கான குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன என்றும், இதனால் கூடுதல் நீர் சேமிக்கப்பட்டு, வேளாண்மை தழைத்தோங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் காமராஜ், வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு விலை இல்லாமல் வழங்கியதன் மூலம், 6 லட்சத்து 68 ஆயிரத்து 39 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.  

மேட்டூர் அணை திறப்பிற்காக, டெல்டா பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், 67 கோடி மதிப்பீட்டில் 392 பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் 3 ஆயிரத்து 457 கி.மீ வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பணிகளை கண்காணிக்கும் பொருட்டு 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் காமராஜ்,  முதலமைச்சரை குறை கூற வேண்டும் என்பதற்காகவே, ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக கண்டனம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

215 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

112 views

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

97 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

73 views

"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச

இலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.

26 views

பிற செய்திகள்

தேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

52 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

14 views

"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

10 views

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

26 views

சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

320 views

"கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.