குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை - 7 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பதிவு : மே 29, 2020, 05:16 PM
சிவகாசியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் புதூரில் வசித்த சிவமுனி , ராமலட்சுமி தம்பதிக்கு 3 குழந்தைகள். இந்நிலையில் ராமலட்சுமி பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரின் வீட்டில் பயங்கர சம்பவம் நடந்தது. கணவர் சிவமுனி  தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

குழந்தைகள் மூவரும் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டுள்ளனர். உடனே வீட்டை பூட்டி கொண்ட சிவமுனி தானும் விஷமருந்தியுள்ளார். அத்துடன் சிவமுனி தனது கைகளிலும் கால்களிலும் ஆயுதத்தால் வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பட்டாசு தொழிற்சாலையில் இருந்த ராமலட்சுமி, தகவல் அறிந்து வீட்டிற்கு வந்துள்ளார். 3 குழந்தைகளையும் மீட்டு  சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதில் சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி என்ற ஏழு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிவமுனிக்கும், 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சிக்கும், கொலை முயற்சிக்கும் காரணம் குடும்ப தகராறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சிவமுனி வாய்திறந்து பேசினால் மட்டுமே சம்பவத்திற்கான காரணம் தெரியவரும்...

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2317 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1168 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

277 views

பிற செய்திகள்

லாரியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி - தற்கொலை செய்தது அம்பலம்

சென்னை குன்றத்தூரில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

669 views

தேர்தல் நடத்தும் விதியில் திருத்தம் தவறானது - ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

62 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, வல்லம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

14 views

"சாத்தான்குளம் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் மூன்று நாள் சிபிஐ காவல்" - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஐந்து காவலர்களும் சிபிஐ காவலில் விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

10 views

முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

26 views

சென்னையில் குறையும் கொரோனாவின் தாக்கம்

சென்னையில் நேற்று மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

329 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.