"ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை" - தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் கடிதம்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை வரும் ஜூன் முதல் தேதி திறக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் தலைவர் எம்.கே.மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.
ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை - தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் கடிதம்
x
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை வரும் ஜூன் முதல் தேதி திறக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் தலைவர் எம்.கே.மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். காணொலி காட்சி மூலம் விசாரிக்க போதுமான தொழில் நுட்பம், உள்கட்டமைப்பு இல்லாத நிலையில், சமூக இடைவெளி உடன் நீதிமன்றங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளார். நாட்டில் தற்போது உள்ள வழக்குகளில் 80 சதவீதம் விசாரணை நீதிமன்றங்களில் தான் நடந்து வருவதாகவும், எஞ்சியுள்ள 20 சதவீத வழக்குகளில் 10 சதவீதம் தான் அவசர வழக்குகள் என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதமாக 2 சதவீத வழக்குகளே விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், 95 சதவீத வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பார் கவுன்சில் தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்