ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவது போல் நடித்து மோசடி - சிசிடிவி காட்சி மூலம் சிக்கிய இளைஞர் கைது

மதுரையில், ATM சென்டரில் பணம் எடுத்து தருவது போல் நடித்து, நூதன முறையில் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவது போல் நடித்து மோசடி - சிசிடிவி காட்சி மூலம் சிக்கிய இளைஞர் கைது
x
பாலமேடு வலையபட்டி சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ATM சென்டரில், பணம் எடுக்க வரும் முதியவர்கள், பெண்களிடம், பணம் எடுத்து தருவது போல், இளைஞர் ஒருவர் நடித்துள்ளார்.அவர்களுக்கு உதவுவது போல், நூதன முறையில் ATM பின் நம்பரை தெரிந்து கொண்டு, அந்த கார்டுக்கு பதிலாக, தாம் தயாரித்து வைத்திருந்த போலி ATM கார்டுகளை வைத்து, அவர்கள் சென்றவுடன், முழு பணத்தையும் திருடியுள்ளார். பத்துக்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து, வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் புகார் அளித்தனர். வங்கி மேலாளர் கொடுத்த புகாரைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து, நூதன கொள்ளையரை பாலமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 28 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், மற்றும் போலி ATM கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர், பாலமேட்டைச் சேர்ந்த சரவணன் என்பதும், இவர் வீடுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணியாளராக வேலை பார்த்து வந்தும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்