+2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.
+2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்
x
திருச்சி மாவட்டத்தில், 13 மையங்களில், ப்ளஸ் 2 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இந்த பணிக்காக வரும் ஆசிரியர்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 6 மையங்களில் ப்ளஸ் 2 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. பணிக்கு வந்த ஆசிரியர்கள் சானிடைசரை கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். 

இதேபோல், ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணத்தில் உள்ள 7 மையங்களில் ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 544 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டதுடன், சமூக இடைவெளியை பின்பற்றி பணிகள் நடைபெற்று வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் அயிரத்து 344 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு வருவதற்கு முன்பாக அவர்களுக்கு உரிய சோதனைகள் செய்யப்பட்டது. அதன்பிறகே அவர்கள் பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்