பாகனை கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை - யானை தெய்வானையை பார்வையிட்ட திமுக எம்எல்ஏ சரவணன்

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானையை, வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
பாகனை கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை - யானை தெய்வானையை பார்வையிட்ட திமுக எம்எல்ஏ சரவணன்
x
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, யானை தெய்வானையை, குளிக்க வைக்கும் போது, அது தாக்கியதால், உதவி பாகன் உயிரிழந்தார்.  இதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரி மற்றும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானையின் உடல்நிலை குறித்து திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் மூன்று தடவை இது போன்று விபத்து ஏற்பட்டுள்ளதால், யானையை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இறந்த உதவி பாகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்