திருவண்ணாமலையில் தொடர் கள்ளச்சாராய வேட்டை - ஒரு வாரத்தில் 5650 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய வேட்டை நடத்திய போலீசார் ஒரு வாரத்தில் 5656 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்தனர்.
திருவண்ணாமலையில் தொடர் கள்ளச்சாராய வேட்டை - ஒரு வாரத்தில் 5650 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
x
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5650 லிட்டர் சாராய ஊறல், 2588 லிட்டர் சாராயம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 108 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்