பொதுத்தேர்வு மற்றும் நீட்தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
பொதுத்தேர்வு மற்றும் நீட்தேர்வு குறித்து முதல்வர் ஆலோசனை
x
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , முதன்மை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 45 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் எந்த அளவிற்கு செய்யப்பட்டுள்ளன, தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகளை மீண்டும் எப்போது தொடங்குவது, நீட் தேர்வு விவகாரத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ள இறுதி கட்ட பயிற்சி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்