இறால் குட்டைகளுக்காக கொண்டு வரப்படும் கடல் நீர் - நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

சீர்காழி அருகே இறால் குட்டைகளுக்கு ஆறு வாய்க்கால் வழியே கொண்டு வரப்படும் கடல்நீரால் நிலத்தடி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இறால் குட்டைகளுக்காக கொண்டு வரப்படும் கடல் நீர் - நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
x
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் பூம்புகார்   வரை கடலோர பகுதிகளில் ஆயிரகணக்காகன இறால் குட்டைகள் இயங்கி வருகின்றன.கடலோர பகுதிகளில் அனுமதி பெற்று தொடங்கிய இறால் குட்டைகள் தற்போது அனுமதியின்றி  10 கிலோ மீட்டர் தூரம் வரை பல கிராம பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. இறால் வளர்ப்புக்காக கடல்நீரை வடிகால் ஆறு மற்றும் வாய்கால்கள் மூலம் கிராமங்கள் வரை அனுமதியின்றி கொண்டு வரப்படுகிறது. .இதனால் நிலத்தடி நீர் பாதிக்கபட்டு விளைநிலங்கள் பயனற்று கிடக்கின்றன. நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள் தற்போது அந்த நீரை பயன்படுத்த முடியாமல் சாகுபடியையே கைவிட்டுள்ளனர்.நிலத்தடி நீர் பாதிப்பால் விவசாயம் பாதிக்கபடுவதுடன்  குடிநீர் ஆதாரமும் கேள்விகுறியாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். . எனவே  அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில்  இயங்கும் இறால் குட்டைகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்