ஓமலூர் : துளசி மூலிகை சாகுபடி அதிகரிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துளசி மூலிகைத் தாவர சாகுபடி அதிகரித்துள்ளது.
ஓமலூர் : துளசி மூலிகை சாகுபடி அதிகரிப்பு
x
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துளசி மூலிகைத் தாவர சாகுபடி அதிகரித்துள்ளது. பூசாரிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் சேர்வராயன் மலையை சார்ந்துள்ள பகுதிகளில் துளசி மூலிகைத் தாவரம் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து துளசியின் தேவையும்  அதிகரித்துள்ளது. அதனால், விவசாயிகள் பலரும் துளசி விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைத்து வகை மண்ணிலும் துளசி செடி வளரும் தன்மை கொண்டது என்றும், கோடை காலத்தில் அறுவடை செய்வதால் அதிக மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்