எடை குறைவான மெக்னீசிய உலோகத்தால் வாகனம், விமானம் - அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி புதிய ஆராய்ச்சி

ஆட்டோமொபைல் துறையில் எடை குறைவான, மெக்னீசிய உலோகத்தை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி வெற்றி கண்டுள்ளது.
எடை குறைவான மெக்னீசிய உலோகத்தால் வாகனம், விமானம் - அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி புதிய ஆராய்ச்சி
x
சர்வதேச அளவில் வாகன தயாரிப்பு, ராக்கெட், விமான வடிவமைப்புகளில் எடை அதிகமான அலுமினியம் மற்றும் இரும்பு அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவின் அளவும் அதிகமாக காணப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் சென்னை ஐஐடி, அமெரிக்காவிலுள்ள வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து மெக்னீசியத்தை வலிமையான, எடை குறைவான உலோகமாக மாற்றும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளது.

இதன்மூலம் எதிர்காலத்தில் வாகனங்கள் மற்றும் விமானம் போன்றவற்றை எடை குறைவாகவும், உறுதியானதாகவும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஐஐடியின் இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் சுஷாந்தா குமார் பனிகிராஹி தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்