கோயிலை திறக்க கோரி இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களை திறக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்து முன்னணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலை திறக்க கோரி இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
திருச்செந்தூர் முருகன் கோயில் நுழைவாயில் முன், இந்து முன்னணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோப்புக்கரணம் போட்டு, கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில் முன்பு திரண்ட இந்த முன்னணி கட்சியினர் தோப்புக்கரணம் போட்டு, கற்பூரம் ஏற்றி போராட்டம் நடத்தினர்.    

கரூரில் கோயில் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட  இந்து முன்னணி கட்சியினர், கோயிலை திறந்தால் கொரோனாவை விரட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர். 

புதுச்சேரி சிவன் கோயில் முன்பு இந்து முன்னணி கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர். கோயில்களை திறக்க இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்