தூர்வாரும் பணியை ஆய்வு செய்த சிறப்பு குழு: "கடைமடை வரை நீர் செல்ல நடவடிக்கை" - சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி தகவல்

மேட்டூர் அணை திறப்பதற்குள் தூர்வாரும் பணிகள் துரிதமாக முடித்து, கடைமடை வரை நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என சிறப்பு அதிகாரி ககன்தீப்சி​ங் பேடி உறுதி அளித்துள்ளார்.
தூர்வாரும் பணியை ஆய்வு செய்த சிறப்பு குழு: கடைமடை வரை நீர் செல்ல நடவடிக்கை - சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி தகவல்
x
காவிரி டெல்டா பாசனத்தின் குறுவை சாகுபடிக்காக, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதற்குள் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படுவதை கண்காணிக்க சிறப்பு குழுவை அரசு நியமித்துள்ளது. இன்றைய தினம், வாளமர்கோட்டை, காட்டூர், தென்னமநாடு ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை சிறப்பு குழு ஆய்வு செய்தது. பின்னர் பேசிய சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, தூர்வாரும் பணிகள் விறுவிறுப்படைந்திருப்பதாகவும், விரைவில் பணிகள்  முடிந்து கடைமடை வரை நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்