திருப்பூரில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது

திருப்பூரில் வாகனத்தில் வேகமாக செல்வதை கண்டித்தவரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது
x
திருப்பூர் பாளையக்காடு கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இளைஞர்கள் சிலர் அந்த வழியாக வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ராஜேஷ், வாகனத்தில் மெதுவாக செல்லுமாறு கூறியதோடு அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நண்பர்களுடன் வந்து ராஜேஷிடம் வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ்  திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்