"ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரமும், மத்திய அரசு 5 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்
x
ஊரடங்கால் பாதிக்கப்படும்  ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரமும், மத்திய அரசு 5 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டின் முன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட கட்சியினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். இதேபோல், சத்தியமூர்த்தி பவனில், ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுக்கு 30 ஆண்டுகளாக இலவசமாக வழங்கிய வந்த மின்சாரத்தை, மத்திய பாஜக அரசு ரத்து செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்