பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்கறிஞர் உள்பட 12 பேர் மீது வழக்கு

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய வழக்கறிஞர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்கறிஞர் உள்பட 12 பேர் மீது வழக்கு
x
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய வழக்கறிஞர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பிரபு என்பவர் கடந்த 8 ஆம் தேதி தமது பிறந்த நாளை, கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், வழக்கறிஞர் பிரபு, அவரது நண்பர்களான பிரகதீஸ்வரன், வினோத், விக்கி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்