20 லட்சம் கோடி நிதி தொகுப்பு திட்டங்கள் - "அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்" - தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தல்

மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு திட்டங்கள் குறித்து, நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென, கட்சித் தொண்டர்களிடம், பாஜக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
20 லட்சம் கோடி நிதி தொகுப்பு திட்டங்கள் - அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் - தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தல்
x
கோவிட்-19க்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து ஒரே வாரத்தில் நாடு முழுவதும் உள்ள ஊடக மையங்களில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.  கட்சி தொண்டர்கள், சானிடைசர், முக கவசங்கள் வழங்க வேண்டும் எனவும், நம் நாட்டில்  தயாரிக்கப்பட்ட பொருட்களையே பயன்படுத்த தீர்மானிக்க வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனை, கோவிட் 19க்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை வீடியோ பதிவுகளாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பா.ஜ.க.  தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா  முழுவுதும், பேரணிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து இவை அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்