திருச்சியில் பணியிட மாறுதலை பார்ட்டி வைத்து கொண்டாட்டம் - சிறைக்காவலர்கள் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் பணியிட மாறுதலை பார்ட்டி வைத்து கொண்டாடிய சிறைக் காவலர்கள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் பணியிட மாறுதலை பார்ட்டி வைத்து கொண்டாட்டம் - சிறைக்காவலர்கள் மீது வழக்குப்பதிவு
x
திருச்சியில் பணியிட மாறுதலை  பார்ட்டி வைத்து கொண்டாடிய சிறைக் காவலர்கள், 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்தியச் சிறையில் பணியாற்றி வரும் சிறைக் காவலர்கள், 37 பேருக்கு விருப்பத்தின் பேரில்  மதுரை, தேனி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் மது அருந்திய நிலையில மத்திய சிறை அருகில் உற்சாக மிகுதியில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியானது. இதனையடுத்து 9 பேர் மீது  கே.கே.நகர் காவல் நிலையத்தில வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்