இறப்பிலும் இணைப்பிரியாத முதிர் வயதான தம்பதி - கணவன் இறந்த சில மணி நேரத்தில் மனைவி உயிரும் பிரிந்தது

வாழ்வில் மட்டுமல்லாது இறப்பிலும் இணை​ப்பிரியாமல் கணவன் இறந்த அடுத்த சில மணி நேரங்களில் மூதாட்டியின் உயிர் பிரிந்தது தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆ​ழ்த்தியுள்ளது.
இறப்பிலும் இணைப்பிரியாத முதிர் வயதான தம்பதி - கணவன் இறந்த சில மணி நேரத்தில் மனைவி உயிரும் பிரிந்தது
x
தஞ்சை மாவட்டம் விளங்குளம் கிராமத்தை சேர்ந்த 95 வயதான ரத்தினம், ஆன்மிக சொற்பொழிவாளராக இருந்து வந்துள்ளார். தனது 90 வயதான மனைவி உடன்  மங்களம் உடன், மதுரையில் உள்ள மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக ரத்தினம் நேற்று காலை அவர் உயிர் பிரிந்த நிலையில், அவருடைய உடலை சொந்த ஊரில் தகனம் செய்ய மகன் முருகானந்தம் விரும்பி உள்ளார். இதனைத் தொடர்ந்த ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய உடல் விளங்குளத்துக்கு எடுத்து வரப்பட்டு உள்ளது. அந்த ஆம்புலன்சில் ரத்தினத்தின் மனைவி மங்களம், மகன் முருகானந்தம் மற்றும் குடும்பத்தினரும் வந்துள்ளனர். விளங்குளத்தில் உள்ள வீட்டில் ரத்தினத்தின் உடல் அருகே கதறி அழுதபடி இருந்த 90 வயதான மங்களம் அம்மாளின் உயிரும் அடுத்த அரை மணிநேரத்தில் பிரிந்துள்ளது.  வாழ்வில் மட்டுமின்றி சாவிலும் கைகோர்த்த தம்பதியினர்  இருவரின் உடல்களுக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, ஒரே தகன மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது. ஒரே நாளில் வயது முதிர்ந்த தம்பதி அடுத்தடுத்து இறந்தது, அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்