திருச்சி அருகே 9 வயது சிறுமி மர்ம மரணம் - சந்தேகத்தின் பேரில் சிறுவனிடம் விசாரணை
பதிவு : மே 25, 2020, 03:43 PM
திருச்சி அருகே 9 வயது சிறுமி தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 9 வயதான சிறுமி தன் வீட்டருகே உள்ள மல்லிகை தோட்டத்தில் தலையில் பலத்த காயத்தோடு கிடந்தார். 

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் அருகில் இருந்தவர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த அந்த சிறுமி மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். ஆனால் சிறுமியின் மரணத்திற்கு காரணம் என்ன? என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்னும் அதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறுமியின் சடலம் கிடந்த இடம் அருகே சிறுவனின் உடைகளும் மீட்கப்பட்டது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 

சிறுமியை பற்றி தகவல் கொடுத்த அந்த சிறுவனின் நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த உடையும், தகவல் கொடுத்த சிறுவனின் உடை என்பதால் போலீசார் சிறுவனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். தலையில் கொடூரமாக அடிக்கப்படும் அளவிற்கு என்ன சம்பவம் நடந்தது? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2195 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

687 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

397 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

169 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

118 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

242 views

போலி கால் சென்டர் மூலம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

117 views

கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி - மனைவியுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்

திண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலையை இழந்து கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5252 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

67 views

அரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

65 views

சேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

1610 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.