கஞ்சா போதையில் தந்தையை கத்தியால் வெட்டிய மகன் - போலீசார் கைது செய்து விசாரணை

மதுபோதையில் வந்த தந்தையை கத்தியால் காலில் வெட்டிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா போதையில் தந்தையை கத்தியால் வெட்டிய மகன் - போலீசார் கைது செய்து விசாரணை
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் போகி தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளியான ரவிச்சந்திரன் மகன் ராஜாராம், கஞ்சா போதையில் இருந்துள்ளார். அப்போது, தந்தையும் குடிபோதையில் வந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ராஜாராம் தந்தையின் காலை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன்  கீழே விழுந்து மயக்கமடைந்தார்.இந்நிலையில், அருகில் இருந்த கார் கண்ணாடிகளையும் உடைத்து, மயக்கமடைந்த ராஜாராமையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தந்தையை தாக்கிய மகன் மீது வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்