சென்னையில் இருந்து மதுரை வந்த முதல் விமானம் - 20 பயணிகளுடன் மதுரை வந்ததாக அதிகாரிகள் தகவல்

சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு இன்று முதல் பயணிகள் விமானம் வந்தடைந்தது.
சென்னையில் இருந்து மதுரை வந்த முதல் விமானம் - 20 பயணிகளுடன் மதுரை வந்ததாக அதிகாரிகள் தகவல்
x
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு, இன்று முதல் பயணிகள் விமானம் வந்தடைந்தது. 61 நாட்களுக்கு பின்னர் வந்த முதல் பயணிகள் விமானம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ விமானத்தில் 20 பயணிகள் வந்தனர். அந்த விமானத்தில் சென்னைக்கு  56 பயணிகள் செல்ல உள்ளனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினிகள் உதவி​யுடன்  கைகளை கழுவி, முககவசம் முறையாக அணிந்த பின்னரே  பயணிகள் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் வழிகாட்டு முறைப்படி பயணிகளை வாடகை கார் ஓட்டுநர்கள் அழைத்து சென்றனர்.  இன்று காலை வந்த பயணிகள் ஜூன் 7 வரை வீட்டிலேயே தனிமையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனை குறிக்கும் முத்திரை அவர்களுக்கு வைக்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்