"காவிரி டெல்டா பாசன பகுதிகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்" - அரசுக்கு மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி டெல்டா பாசன பகுதிகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் - அரசுக்கு மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்
x
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால  அடிப்படையில் நிறைவு செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேட்டூர் அணை திறக்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்குள் கால்வாய்கள் அனைத்தையும் தூர்வார முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் நலன் கருதி, போர்க்கால அடிப்படையில் பாசன கால்வாய்களை தூர்வாரும் பணியை நிறைவேற்றிட வேண்டும் எனவும், எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் வெளிப்படையாகவும், கடைமடை வரை தங்கு தடையின்றி, பயன்படும் வகையிலும் தூர்வாரும் பணி நடைபெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும், அரசின் சிறப்பு கண்காணிப்பு குழுவில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்