தமிழகத்தில் கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட கொரோனா நோயாளியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை
x
கொரோனாவுக்கு நவீன சிகிச்சையான பிளாஸ்மா முறை கொண்டு சிகிச்சையளிக்க தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உட்பட நான்கு மருத்துவமனைகளுக்கு  இந்திய மருத்துவக் கழகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் திரவிய பொருளான பிளாஸ்மா, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சைக்கான முதற்கட்ட ஆராய்ச்சியை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கடந்த வாரம் தொடங்கியது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மருத்துவர் உட்பட எட்டு பேரிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா, நோயாளி ஒருவரின் உடலில் செலுத்தப்பட்டது. முதற்கட்ட சோதனையில் நோயாளியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா ஆராய்ச்சி இரண்டாம் கட்டத்திற்கு சென்று உள்ளது. அடுத்த கட்டமாக வயது விகிதாச்சாரம் மற்றும் கொரோனா உடன் தொடர்புடைய இணை நோயாளிகளுக்கு ஆய்வு செய்யவும் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்