அமைச்சர் எஸ்.பி வேலுமணி பற்றி அவதூறு பரப்பியதாக புகார் - தி.மு.க., எம்.எல்.ஏ மீது காவல்நிலையத்தில் தனியார் நிறுவனம் புகார்

தனியார் நிறுவனம் ஒப்பந்த பணிகள் பெற்றதன் பின்னணியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இருக்கிறார் என அவதூறு பரப்புவதாக புகார் எழுந்ததால் சிங்காநல்லூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
அமைச்சர் எஸ்.பி வேலுமணி பற்றி அவதூறு பரப்பியதாக புகார் - தி.மு.க., எம்.எல்.ஏ மீது காவல்நிலையத்தில் தனியார் நிறுவனம் புகார்
x
தி.மு.க.-வின் கோவை கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக், கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கோவை மாநகராட்சியின் ஒப்பந்த பணிகள் விவரங்கள், மாநகராட்சி தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் ஏன் வெளியிடப்படுவதில்லை என அந்த அறிக்கையில் கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் ஆலயம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் இயக்குனர் புகார் ஒன்றை அளித்துள்ளார். சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது சகோதரரின் உதவியுடன் தங்களது நிறுவனம் கோவை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் டெண்டர் வாங்கியதாக உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். தங்கள் நிறுவனத்தையும், அமைச்சரையும் இணைத்து பொய்யான தகவல்களை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பரப்பி வருவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மீது, மூன்று பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்