அரசு பணி நியமனங்களுக்கு தடை விதித்த தமிழக அரசு - கணிசமாக குறையும் குரூப் 4, குரூப் 2 பணியிட எண்ணிக்கை

அரசின் சிக்கன நடவடிக்கையால் குரூப் 4 மற்றும் குரூப் 2 பணியிடங்கள் குறைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பணி நியமனங்களுக்கு தடை விதித்த தமிழக அரசு - கணிசமாக குறையும் குரூப் 4, குரூப் 2 பணியிட எண்ணிக்கை
x
புதிய பணி நியமனங்களுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், குருப்-4 மற்றும் குரூப்-2 பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என, டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  அதே நேரத்தில் ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள தேர்வுகள் எவ்வித தடையுமின்றி நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டு உள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில் அரசு, செலவீனங்களை குறைப்பதற்கும், அரசு துறைகளில் புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளவும் தடை விதித்துள்ளது. காலி பணியிடங்களை நிரப்பவே தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தப்படுவதாகவும் புதிய பணியிடங்களுக்கானது  அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, அதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் நடத்த தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குரூப் 4 மற்றும் குரூப் 2 பணியிடங்கள் எண்ணிக்கையில் பல புதிய பணியிடங்களாக இருப்பதால், அந்த எண்ணிக்கை  குறையும் எனவும்  டி.என்.பி.எஸ்.சி  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Next Story

மேலும் செய்திகள்