இறந்தவரின் உடலை எடுத்து வருவதாக கூறி அனுமதி சீட்டு வாங்கி செம்மரக்கட்டைகள் கடத்திய கும்பல் கைது
ராமநாதபுரத்தில், இறந்தவரின் உடலை எடுத்து வருவதாக அனுமதி சீட்டு பெற்று, போதை பொருள் மற்றும் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த சர்வதேச கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் உத்தரவின் பேரில், தனிப்பிரிவு போலீஸ், 8 குழுக்களாக பிரிந்து கண்காணித்து வந்தனர். அப்போது, போதை மாத்திரைகள், செம்மர கட்டைகளை கடத்தி வந்த சர்வதேச கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கடத்தல் பொருட்களை கோவாவில் இருந்து பெங்களூர் கொண்டு வந்து, அங்கிருந்து கோவை, மதுரை, ராமநாதபுரம் வழியாக திருவாடானை கொண்டு வந்து, அங்கிருந்து தொண்டி கடற்கரைக்கு கொண்டு சென்று, நாட்டுப் படகு மூலமாக இலங்கைக்கும், பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதாக கூறி, இந்த பொருட்களை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், ஆட்டோர் உள்ளிட்ட வாகனங்கள், தொலைபேசிகள், லட்சக்கணக்கான பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story

