சென்னையில் 134 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி...
சென்னையில் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 134 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு, அரசு வழிகாட்டுதல்படி, பிரசவ தேதி குறிக்கப்படும் 5 நாட்களுக்கு முன்பாகவே, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முடிவில்,மே மாதத்தில், நோய் பாதிப்பிற்கு ஆளாகும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராயபுரம் அரசு மருத்துவமனையில் 47 கர்ப்பிணிகளும், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் 34 கர்ப்பிணிகளும், திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் 23 கர்ப்பிணிகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணிகளுக்கும், தற்போது கொரோனோ உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Next Story

