கொரோனா தடுப்பு நடவடிக்கை: அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுவில், அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை: அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்
x
* அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை அதிமுக அரசு நியமித்துள்ளதாக கூறியுள்ளார்.

* அந்த குழுவில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

* சிறப்புக்குழுவில், அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்திய ஸ்டாலின்,

* ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

* ஜனநாயக ரீதியாக,  கடமைகளையும் பொறுப்புகளையும் பரவலாக்கி, பகிர்ந்தளித்து, கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்