கஞ்சா போதையில் ஆட்டம் காட்டிய இளைஞர்கள் - முதலமைச்சரின் கான்வாய்க்குள் புகுந்த‌தால் பரபரப்பு
பதிவு : மே 21, 2020, 07:25 PM
கஞ்சா போதையில் முதலமைச்சரின் கான்வாய்க்குள் புகுந்து ஆட்டம் காட்டிய இளைஞர்கள் பிடிக்க முயன்ற காவலரின் காலில் இருசக்கரவாகனத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது அலுவலக பணிகளை முடித்துவட்டு தலைமை செயலகத்தில் இருந்து மதியம் 2 மணி அளவில் கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கரவானத்தில் வந்த 2 இளைஞர்கள்,திடீரென  முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய்க்குள் புகுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒலி பெருக்கி மூலம் உதவி ஆணையர்  இளைஞர்களை எச்சரித்த நிலையில், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பைக்கில் சாகசங்கள் செய்த படி அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தனர். இதையடுத்து துணை ஆணையர் அவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.  போலீசாருக்கு ஆட்டம் காட்டிய இளைஞர்களை நேப்பியர் பாலம் அருகே போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிடிக்க முயன்றார். அப்போது அவர் மீது பைக்கை ஏற்றிவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞர்கள், அருகே வந்த தம்பதிகள் மீதும் மோதி தடுமாறி விழுந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

280 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

152 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

105 views

பிற செய்திகள்

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

7 views

மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

8 views

ரூ.64,000 வருவாய் ஈட்டிய மீனவ பெண்கள் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார்.

7 views

நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் - கை கொடுத்த ஜிபிஎஸ் கருவி

துப்பாக்கி முனையில் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

50 views

யானைக்கு தீ வைப்பு சம்பவம் ; இருவர் கைது - சிறையில் அடைப்பு

மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

17 views

சிறுத்தையை கொன்று தின்ற கும்பல்

கேரளாவில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து அதை கறி சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.