கோயம்பேட்டில் மத்திய குழு திடீர் ஆய்வு - சந்தையில் கிருமி நாசினி தெளிப்பு
சென்னை கோயம்பேடு சந்தையில் தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் மனோஜ் முரேக்கர் தலைமையிலான குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது.
கோயம்பேடு தொடர்பில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து அந்த சந்தை மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உயர் ரக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனிடையே தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் மனோஜ் முரேக்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு கோயம்பேடு சந்தையில் திடீரென ஆய்வு மேற்கொண்டது. கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கும் போது நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆலோசனை வழங்க உள்ளது. அதேபோல் நோய் தொற்றால் அதிகம் பாதித்த முதல் ஏழு மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தொற்று தடுப்பு பணிகள் குறித்தும் மனோஜ் முரேக்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
Next Story

