"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% வரை இட ஒதுக்கீடு" - பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு
பதிவு : மே 20, 2020, 03:41 PM
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு ஒரு வாரத்தில் வழங்க உள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து, 3  மாதத்தில் அரசுக்கு பரிந்துரை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழுவி​ன் ​விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வாரத்தில் குழுவின் பரிந்துரை முதலமைச்சரிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரிந்துரையை அரசு ஏற்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டிலேயே,  தனி ஒதுக்கீடு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள ஆறாயிரம் இடங்களில் 900 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த ஆண்டு நீட் தேர்வை 17 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் எழுத உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

643 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

159 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

105 views

பிற செய்திகள்

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல் வழங்க உத்தரவு

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் கல்வி பயில தேவையான பொருட்களை வழங்குமாறு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

8 views

ஐடி நிறுவனங்களுக்கு தளர்வுகள் - 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

108 views

தமிழகம் முழுவதும் காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகளை பணிமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

147 views

தமிழகத்தில் மேலும் 3,680 கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261

தமிழகத்தில் இன்று மேலும் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

53 views

முதலமைச்சருக்கு அ​மெரிக்க நிறுவனம் "பால் ஹாரிஸ் ஃபெல்லோ - PAUL HARRIS FELLOW" என கவுரவம்

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை "PAUL HARRIS FELLOW" என அழைப்பதாக அ​மெரிக்காவில் உள்ள ரோட்டரி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

78 views

நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை - தமிழக அரசு

"சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.