"அரசு, தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி வேண்டும்" - மெட்ரிகுலேசன், மேல்நிலை பள்ளிகள் சங்கம் கோரிக்கை
பதிவு : மே 19, 2020, 01:52 PM
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
* தனியார் நர்சரி, பிரைமரி , மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்க பொதுசெயலாளர் நந்தகுமார், அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில்,  

* பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிந்ததும், மாணவர்கள் சேர்க்கை நடத்தவும், 

* பழைய கல்வி கட்டணத்தை பெற்றோரிடம் கேட்டு பெறவும் அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார். 
 
* வருகிற ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி அனைத்து தனியார் பள்ளிகளையும் திறந்திட தமிழக அரசு அனுமதித்திட வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

* ஜூலை மாதம் முதல் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியாளர் பள்ளிகளை திறந்து கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர அனுமதி வழங்கிட வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. 

* முக கவசம், கையுறைகளை மாணவர்கள் வீட்டில் இருந்தே அணிந்து வரலாம் என்றும்,சமூக இடைவெளியுடன் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை செய்யலாம் என்றும் அந்த சங்கத்தினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். 

* குழந்தைகளின் உடல்நிலையை பெற்றோர்கள், முழு பரிசோதனை செய்து எந்த நோயும் இல்லை என உறுதி செய்து  மருத்துவ சான்றிதழுடன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர். 

* நிலவேம்பு கசாயத்தை கடந்த காலங்களில் வழங்கியது போல், கபசுர குடிநீரை அரசே 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தனியார் பள்ளி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2108 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

474 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

281 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

113 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

50 views

பிற செய்திகள்

குழந்தைகள் காப்பகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகள் குணமாகிவிட்டனரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

20 views

கொரோனா பரவல் குறித்து ஆய்வு - நாளை சென்னை வருகிறது மத்திய குழு

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம், மத்திய குழு நாளை சென்னை வருகிறது.

24 views

66 மூலிகைகள் அடங்கிய சித்த மருந்தினை ஆராயுங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனாவிற்கு இம்ப்ரோ சித்த மருந்தை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

40 views

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 50 துரித செயல் வாகனங்கள் சேவை - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

11 views

ஊரடங்கு தரவுகளால் வாகனங்களால் நிரம்பி வழியும் சாலைகள் - பறிமுதல் செய்த வாகனங்கள் ஒப்படைப்பு

சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை நகர சாலைகள் மாநகர பேருந்துகள் தவிர பிற வாகனங்களால் நிரம்பி வழிந்தன.

18 views

உதவி ஆய்வாளரை தாக்கிய விவகாரம் - முன்னாள் எம்.பி அர்ஜுனனுக்கு முன் ஜாமீன்

ஓமலூர் சுங்கச்சாவடியில் உதவி ஆய்வாளரை தாக்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் எம்பி அர்ஜுனனுக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.